ஞாயிறு, 1 ஆகஸ்ட், 2021

தற்கொலையும் ஜோதிடமும்

 KaniPrakash M ( JKPATC ):

தங்களுக்கு ஏற்பட்ட நெருக்கடியான பாதிப்பை எதிர் கொள்ள முடியாமல்.. தங்களுடைய பாதிப்பை பெரியதாக கருதி தற்கொலை செய்து கொள்கிறார்கள் . 



 


நாம்..


ஜோதிட ரீதியான காரணங்கள் கிரக நிலைகளை ஆராய்வோம் . ஜாதகத்தில் 


   மூன்றாம் பாவமும் முக்கிய பங்கு வகிக்கிறது . மூன்றாம் பாவத்தின் மூலம் மனநிலையை அறியலாம் .


 மனம் செயல்படும் விதம், மனதைரியம் , மன அலைகள் , மனம் எடுக்கும் முடிவுகள் பற்றி மூன்றாம் பாவமும் , 


அதன் அதிபதியின் நிலையைத் தெரிந்து கொள்ள முடியும் .


   3 ஆம் அதிபதி பகை நீச்சம் பெற்றிருந்தாலும் , 


3 ல் ராகு , கேது , சனி , மாந்தி , பகை கிரகம் , நீச்சகிரகம் இருந்தாலும் 


ஜாதகர்க்கு மனோ தைரியம் குறையும் , 


நல்ல எண்ணங்கள் இருக்காது . சிந்தனைகளின் முடிவுகள் அடிக்கடி மாறிக்கொண்டே இருக்கும் . 


இவர்களுடைய திசாபுக்திகள் நடைமுறைக்கு வந்தால் தவறான முடிவுக்கு சொல்வார்கள் . 


    தற்கொலைக்கு முடிவு எடுக்கும் சூழ்நிலையும் , அற்பமாய் ஆயுளை முடித்துக்கொண்டு உலக வாழ்க்கையிலிருந்து விடுவித்துக் கொள்ள மனம் துடிக்கும் . 


ஜாதகத்தில் கெட்ட கிரக திசாபுத்திகள் நடப்பில் இருக்க வேண்டும் 


அவ்வாறு கெட்ட திசாபுக்திகளை அறிந்து கொண்டால் அதிலிருந்து விடுபட முயற்சிக்கலாம் 


1.8 ஆம் வீடுகள் மூலம் ஆயுளின் காலத்தை அறியலாம் . 


  ஜாதகத்தில் 1,7 ம் வீடுகளின் ஆய்விலிருந்து தற்கொலை நிலைகளை அளவிட முடியும் .   


  லக்கினத்திற்குத் முக்கிய பங்கு உள்ளது . 



கிரக நிலைகள்


 ✍ லக்கினம்..


  செவ்வாய் , சனி , ராகு , கேது ஆகிய கிரக நட்சத்திர சாரம் பெற்று இருப்பதும் .


 ✍) லக்கினத்தில் செவ்வாய் , சனி , ராகு , கேது மாந்தியிருந்தாலும் அல்லது இணைந்திருந்தாலும் ,



✍ ) லக்னத்திற்கு பாதகாதிபதியின் கிரகநட்சத்திர சாரத்தில் லக்னம் நின்று இருப்பதும் , 



✍ ) லக்கினம் ராசி தொடக்கத்தில் அல்லது முடியும் தருவாயில் அதாவது ராசி சந்திப்பில் லக்கினம் ராசி அமைந்திருந்தால் பலம் குறைந்து காணப்படும் . 



✍ ) லக்கினம் நின்ற ராசிகளில் கிரகயுத்தம் இருப்பினும் லக்னப்பாதிப்பு அடையக்கூடும் .


 ✍ ) லக்கினாதிபதி பகை நீசம் பெறுவதும் , லக்கினாதிபதி பகை கிரகங்களுடன் இருப்பதும் லக்கினாதிபதி வலு குறைந்திருப்பது மற்றும் லக்னாதிபதி 6 , 8 , 12 ல் மறைந்து இருப்பதும் . 


 

✍)


லக்னம் பலம் குறைந்து 6 - 8 - 12-ஆம் வீடுகளில் ஒன்றில் இருந்தாலும்,  


லக்கினத்தில் 6 - 8 - 12-ஆம் அதிபதிகள் தனித்தனியே அல்லது சேர்ந்திருந்தாலும்,  ஜாதகருக்கு உடல் நிலையில் பாதிப்பை தரும்.


 பல துன்பங்கள் நோய் பாதிப்பும் ஏற்படுத்தும். 





 ✍ ) சனி , செவ்வாய் குருவை சூரியனை , சந்திரனை பார்க்கப் பெறுதல் , 


✍ ) சூரியனும் , சந்திரனும் சனியால் பாதிப்படைய லக்கினாதிபதியான இயற்கை சுபக்கிரகம் 11 ல் ராகு ( அ ) கேதுவுடன் அமைந்திருத்தல்




✍ ) சுக்கிரன் , குரு புதன் 6 , 8 , 12 ஆம் வீடுகளில் ஒன்றில் இருந்தால் அற்பாயுள்.





  ✍ ) சனி சந்திரனுக்கு 8 ல் நின்றால் அந்த ஜாதகனுக்கு அதிக துன்பம் ஏற்படும்.


 தற்கொலை செய்து கொள்வதற்கு எண்ணம் ஏற்படும் . 


பொருள் நிலமும் நஷ்டமாகும் . அரச தண்டளை கிடைக்கும் . 


லக்னாதிபதி கேந்திரத்தில் இருந்தால் மேல் கூறிய துன்பங்கள் விலகி சுப பலன்கள் ஏற்படும் .


 


 ✍) மேஷம் அல்லது விருச்சிகமாகிய ராசிகளிலொன்று லக்கினமாக இருக்க,


 இந்த லக்கினத்திற்கு 6-ல் அல்லது 8-ல் பாவிகள் இருந்தால் விஷத்தால் மரணம் ஏற்படும் . 



✍ ) லக்னத்தில் செய்வால் , சனி , ராகு , கேது நின்று இவர்களுடன் மாந்தி இணைந்து..


 தசாபுத்தி நடத்தினால் பல்வேறு பிரச்சினைகளால் மனம் பலவீனம் பெற்று பாதிப்பிற்கு உள்ளாவார்கள். 


✍) மாந்தியோடு இணைந்த எந்த கிரக திசாபுத்தி நடப்பில் இருந்தாலும் தற்கொலை செய்யத் தோன்றும். 


✍ ) லக்கினத்திற்கு பாதகமானவர்களின் பாவாதிபதி திசாபுத்தி காலத்திலும் ஏற்படும் வாய்ப்புள்ளது . 


✍ ) தசாநாதன் , பகை , நீசம் பெற்றும் கிரகயுத்தம் பெற்றும் திசாபுத்தி நடத்தினாலும் வாய்ப்புள்ளது . 


✍ ) தசாநாதன் 6,12 ல் நின்று தசாபுத்தி நடத்தக்கூடாது .


 ✍ ) தசாநாதன் பகை கிரகங்களுடன் அல்லது 6,8,12 ம் பாவாதிபதிகளுடன் இணைவு பெற்றிருக்கக்கூடாது .         


   மேல்கண்ட அமைப்புகள் உடைய ஜாதகரை,

 எப்போதும் கவனித்துக் கொண்டேயிருக்க வேண்டும் . இவர்களுக்கு தாழ்வு மனப்பான்மை வரக்கூடாது .


 நல்ல எண்ணங்களையும் , சிந்தனைகளையும் இவர்களுக்கு உருவாக்க வேண்டும்.




  ✍ ) 

உடல் காரகனாகிய சந்திரனுக்கும் ,

 உயிர் ஸ்தானமாகிய லக்கினத்துக்கும்..


 3 ம் அதிபதியுடன் சனி இணைந்து ஏதாவது ஓர் ராசியில் இருந்தால் , 


இவர்களது தசாபுத்திக் காலங்களில் ஜாதகர் விஷம் சாப்பிட்டு தனது உயிரைமாய்த்துக் கொள்வார் . 


இவர்களுடன் ராகு இணைந்தாலும் , சுருக்குமாட்டித் தற்கொலை செய்து கொள்வார்கள்.



✍ )  லக்கினத்திற்கு அல்லது ராசிக்கு மூன்றாம் அதிபதியும் சனியும் சேர்ந்து ஏதாவது ஒரு ராசியில் இருந்து இவர்களின் தசா புத்தியில் விஷம் சாப்பிட்டு தன்னுயிரை  தான மாய்த்துக் கொள்வார்கள் . 


 ✍)  ராகு இவர்களுடன் சேர்ந்திருந்தால் கயிற்றில் தன்னுயிரை மாய்த்துக் கொள்வார்கள் . 


 ✍✍✍✍


மேஷம் லக்கினம்  புதன் சனி 


ரிஷபம் லக்கினம் சந்திரன் சனி


மிதுனம் லக்கினம் சூரியன் சனி


கடகம் லக்கினம் புதன்  சனி


சிம்மம் லக்கினம் சுக்கிரன் சனி 


கன்னி லக்கினம் செவ்வாய் சனி 


துலாம் லக்கினம் குரு சனி 


விருச்சிகம் லக்கினம் ராகு சனி 


தனுசு லக்கினம் ராகு சனி 


மகரம் லக்கினம் குரு சனி 


கும்பம் லக்கினம் செவ்வாய் சனி


மீனம் லக்கினம் சுக்கிரன் சனி


  லக்கினத்திற்கு மூன்றாம் அதிபதியும் சனியும் சேர்க்கை பெற்றிருந்து இவர்களின் திசாபுத்தி நடந்தால் உடல் & உயிருக்கும் பாதிப்பை தரும்.


 கோச்சார நிலைகளையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும் .




  ✍ )  

லக்கினாதிபதியும் 

ஆறாம் அதிபதியும் சேர்ந்திருக்க

 இவர்களுடன் ராகு சேர்க்கை பெற்றிருந்தால் அதிகமான மருந்தை சாப்பிட்டு மரணத்தை அடைவர்கள்.




  ✍) லக்கினாதிபதியும் ஆறாம் அதிபதியும் சேர்ந்திருக்க இவர்களுடன் சனி சேர்ந்தால்‌.


 தண்ணீரால் மரணத்தை அடைவர்கள்.




    ✍ ) 

ஐந்தாம் அதிபதி,  

மூன்றாம் அதிபதி,  லக்கினாதிபதி 

மூவரும் சேர்ந்து இவர்களுடன் ராகு அல்லது கேது சேர்ந்திருந்தால் கயிற்றில் தூக்குப் போட்டுக் கொண்டு மரணத்தை அடைவார்கள்.


  ✍ ) 

மகரம் மற்றும் கும்பம் நான்காம் வீடாக அமைந்து அதில் சந்திரன் இரண்டு பாவிகளுடன் இருந்தால்..


 கயிற்றில் தூக்குப் போட்டடு இறந்து விடுவான்.

Thanga Kani astrologer