வெள்ளி, 26 பிப்ரவரி, 2021

திருமண பொருத்தம் Kp Astrology

 Advanced Kp Astrology முறையில் காலதாமான திருமணம் யாருக்கு?அதற்கான பாவங்கள் யாவை?

அதற்கான கிரக்காரகம் யாது? 

காலதாமான திருமணத்திற்கான விதிகள் யாவை?

விதி 1

லக்னம் கொடுப்பினை 7ஆம் பாவத்திற்க்கு சாதகமா அல்லது பாதகமா என்று பார்பது

விதி 2

7ஆம் பாவம் தன்னுடைய பாவத்திற்க்கும் சாதகமான அல்லது பாதகமான பாவங்களை தொடர்புகொண்டுள்ளதா?

விதி 3

7ஆம் பாவம் லக்ன பாவத்திற்க்கு சாதகமான அல்லது பாதகமான பாவங்களை தொடர்புகொண்டுள்ளதா?

விதி 4

களத்திர காரகன் சுக்கிரன் 7ஆம் பாவத்திற்க்கு சாதகமான அல்லது பாதகமான பாவங்களை தொடர்புகொண்டுள்ளதா?

விதி 5

நடப்பு தசை மற்றும் புத்திகள் லக்னம் மற்றும் 7ஆம் பாவத்திற்கு சாதகமான அல்லது பாதகமான பாவங்களை தொடர்புகொண்டுள்ளதா?

விதி 6

7ஆம் பாவ உபநட்சத்திர அதிபதி தான் நின்ற நட்சத்திரம் உபநட்சத்திரம் மூலமாக 6,8,12ம் பாவங்களை தொடர்பு கொண்டால் 7ம் பாவம் 60 சதவீதம் பாதிப்பு அடைந்துள்ளது?

விதி 7

7ஆம் பாவ உபஉபநட்சத்திர அதிபதி தான் நின்ற நட்சத்திரம் உபநட்சத்திரம் மூலமாக 6,8,12ம் பாவங்களை தொடர்பு கொண்டால் 7ம் பாவம் 25 சதவீதம் பாதிப்பு அடைந்துள்ளது?


விதி 8

7ஆம் பாவ ஆரம்பமுனை நட்சத்திர அதிபதி தான் நின்ற நட்சத்திரம் உபநட்சத்திரம் மூலமாக 6,8,12ம் பாவங்களை தொடர்பு கொண்டால் 7ம் பாவம் 15 சதவீதம் பாதிப்பு அடைந்துள்ளது?

விதி 9

7ம் பாவம் பாதிக்கபட்டுருக்கும் பொழுது 5ம் பாவம் தன்னுடைய பாவத்திற்கும், லக்னத்திற்கும் சாதகமான பாவங்களை கண்டிப்பாக தொடர்புக்கொண்டுடிருக்க வேண்டும் என்ற கட்டாயத்திற்கு தள்ளபடுகிறது.  

Kp Astrology


ஏனெனில் 5ம் பாவத்தில் காதல் வயப்படுதல்,

இன்ப உணர்வுகளை அதிகமாக நுகருதல், 

எதையும் உணர்வு பூர்வமாக சிந்தித்தல்,

,சிற்றின்ம்பம் மீது அதிகமான நாட்டம் 

,கவர்ச்சிகளுக்கு எளிதில் மயங்குதல், 

கற்பனை கலந்த உணர்வுகள், உல்லாசம்,சல்லாபம், காமம்,தாம்பத்தியம்,

கலை,தன்னை அழகுபடுத்திக்கொள்ளுதல், 

ஹார்மோன்,  மற்றவர்களிடம் மயங்குதல், ஈர்ப்பு, விட்டுக்கொடுக்கும் குணம், அரவணைக்கும் வாழ்க்கை, பாசம், பாசம்,உணர்ச்சிவாய்படுதல் தமது செயல்களால் மற்றவர்களை மகிழ்ச்சிப்படுத்துதல்,

 கேளிக்கைகள், சூதாட்டம், சினிமா,நாடகம்,இசை,எதையும் அளவிற்கு அதிகமாக வர்ணணை செய்தல்,மென்மையான உணர்வுகள் போன்ற பல காரகங்களை தன்னிடத்தே கொண்டுள்ளது 5ம் பாவம் ஆகும்.

7ம் பாவம் பாவம் என்பது ஒருவருடன் இணைந்து செயல்படுவதை குறிக்கும், ஜாதகர் ஸ்பரிச சுகத்தை மற்றொருவருக்கு கொடுத்து அவரிடம் இருந்து பெறுவதை குறிக்கும்.

 உள்ளதை மற்றவர்களிடம் பகிர்ந்துக்கொள்வதை குறிக்கும்.தனக்கு சம்மானவர் களுடன் பழவதைகுறிக்கும்.

ஏனெனில்  7ம் பாவம் பாதிக்கபட்டுருக்கும் பொழது மேலே குறிப்பிட்டுள்ள 7ம் பாவ காரகத்தை ஒருவரல் அனுபவிப்பதில் பிரச்சனைகள் ஏற்படும் 


அதை ஈடுகட்டவே 5ம் பாவம் தன்னுடைய பாவத்திற்கும லக்னத்திற்கும சாதகமான பாவங்களை தொடர்பு கொண்டுயிருந்தால் ஜாதகருக்கு 7ம் பாவத்தால் ஏற்பட்ட பாதிப்பில் இருந்து மீளமுடியும்.

விதி 10

7ஆம் பாவ உபநட்சத்திர அதிபதி தான் நின்ற நட்சத்திரம் உபநட்சத்திரம் மூலமாக 6,8,12ம் பாவங்களை தொடர்பு கொண்டால்...

7ம் பாவம் 60 சதவீதம் பாதிப்பு அடையும்,

 எனவே, கண்டிப்பாக சுக்கிரன் ஒற்றைப்படை பாவங்களை தொடர்பு கொண்டுயிருக்கவேண்டும்.

விதி 11

மதி என்ற தசை புத்தி விபரம்

7ம் பாவம் பாதிக்கபட்டுயிருந்தாலும் ஜாதகருக்கு பிறந்த முதலே நடக்கும் தசை புத்திகள் ஒற்றைப்படை பாவங்களை கொண்டு நடக்கும் பொழுது இளமையிலே ஜாதகருக்கு திருமணம் நடக்கும்.

ஒற்றைப்படை பாவங்கள் தன்னுடைய அணியின் தசையில் தன்னுடைய பாவ பலன்களை வலிமையாகவும்,இரட்டைப்படை பாவங்கள் தன்னுடைய அணியின் தசையில் தன்னுடைய பாவ பலன்களை வலிமையாகவும் செய்யும்.

7ம் பாவம் பாதிக்கபட்டுயிருந்தாலும் நடப்பது ஒற்றைப்படை பாவ தசைகள் என்பதால் 7ம் பாவ உப நட்சத்திரத்தால் வலிமையாக தன்னுடைய பாவத்தை கெடுக்க முடியாது?என்பதால் இளமையிலே ஜாதகருக்கு திருமணம் நடக்கும்.


Jothisha Acharya Kaniprakash M

8056245107, 8056245187

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thanga Kani astrologer