2ம் பாவம் :
முகத்தில் உள்ள கண், மூக்கு, வாய், நாக்கு, பற்கள், தாடை, கன்னம், தொண்டை போன்றவற்றை 2ம் பாவம் குறிக்கும்.
ஒருவரது சொந்த கருத்தினை விளக்குவது அவரது பேச்சுத்திறன் ஆகும்,
பார்வை,
சுவையான உணவினை உட்கொள்ளும் அமைப்பு, ஒருவரது முக லட்சணம் போன்றவைகள் 2ம் பாவத்தின் காரகங்களாகும்.
ஒருவருக்கு கிடைக்கக்கூடிய பணவரவு
அவரது சொந்தபணம், கையிருப்பு பணம்,
செல்வம்,
சொந்த பணத்தை பாதுகாக்கும் திறன்,
எளிதில் பணமாக மாற்றத்தக்க பொருட்கள்,
ஒருவர் தனது சொத்தை அனுபவிக்கும் யோகம்,
வாழ்க்கைக்கு தேவையான பணம் போன்றவைகள் 2ம் பாவத்தின் காரகங்களாகும்.
3ம் பாவம் என்பது பத்திரங்களை குறிக்கும்.
வீடு, நிலம், வாகனம் போன்றவற்றுக்கு பத்திரங்கள் அவசியமாகும்.
2ம் பாவம் 3ம் பாவத்திற்கு 12ம் பாவம் என்பதால் 2ம் பாவ காரகங்களுக்கு பத்திரங்கள் தேவையில்லை.
எனவே இதனை எப்போது நாம் நினைக்கிறோமோ அப்போதே எளிதில் பணமாக மாற்றிக் கொள்ளலாம்.
2ம் பாவம் என்பது ஜாதகரையும், அவரோடு சேர்ந்த அவரது குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களையும் குறிக்கும்.
ஜாதகரின் செல்வம் வரும் வழிகள் மற்றும் தனம் செல்லும் வழிகள்,
பாலகல்வி,
தாயின் மூத்த சகோதரம், உடல் உணவை ஏற்றுக்கொள்ளும் திறன், போன்றவைகள் 2ம் பாவத்தின் காரகங்களாகும்.
Jothisha Acharya
Kaniprakash M
80562 45107
80562 45187
Chennai Tamilnadu

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக