சனி, 13 பிப்ரவரி, 2021

லக்ன பாவம்

 உடல் கூறில் லக்னபாவம் என்பது தலையின் மேல் பகுதியான நெற்றி, மூளை போன்றவற்றை  குறிக்கும். 

லக்ன பாவம் பன்னிரண்டு பாவங்களின் காரகங்களையும் தன் கட்டுப்பாட்டில் வைத்து ஜாதகத்தை இயக்கும்.


லக்ன பாவத்திலிருந்து மற்ற பாவங்களுக்கு காரகங்கள் பிரித்து தரப்படுகின்றன. 

உடலில் உயிர் இருக்குமிடம் மூளை. எனவே லக்னம் என்பது மூலம் அதாவது உயிரையும் குறிக்கும் காரகமாகும். 

ஜாதகரின் உடலின் பொதுவான தோற்றத்தை லக்ன பாவமே நிர்ணயிக்கும்.


தலைவர்கள், தலைமை பண்பிற்கு சொந்தக்காரர்கள், திறமைசாலிகள், கௌரவமானவர்கள் போன்றவர்கள் லக்ன பாவத்தை கொண்டே அறியப்படுகின்றார்கள்.


ஜாதகரின் பொதுவான எண்ண ஓட்டங்கள், சுய முயற்சிகள், செயல் திறன், ஆரோக்கியம், பெருந்தன்மை, ஒழுக்கம், 

புகழ், நிர்வாக திறன், 

ஒரு துறையில் சாதனை படைக்கும் திறன், வெற்றி அல்லது தோல்வி, 

ஆண்மை மற்றும் பெண்மை தன்மைகள், உடலின் நோய் எதிர்ப்பு திறன், தா

என்ற எண்ணம், பணத்தை விட கௌரவத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தல், பணத்தை இழந்து கௌரவத்தை பெறுதல் போன்றவைகள் லக்னபாவத்தின் காரகங்கள் ஆகும்.

1 கருத்து:

Thanga Kani astrologer