செவ்வாய், 24 ஜனவரி, 2023
திங்கள், 12 டிசம்பர், 2022
வியாழன், 7 ஜூலை, 2022
திங்கள், 4 ஜூலை, 2022
வெள்ளி, 28 ஜனவரி, 2022
செவ்வாய், 25 ஜனவரி, 2022
ஜாதக பலன்கள்
சனியுடன் மற்ற கிரகங்கள் சேர்ந்தால் என்ன ஆகும் என்பதை பார்க்கலாம்.
நமது ஜாதகத்தில் முதலில் யார் இருக்கிறார் என்று பார்க்க வேண்டும்.
உதாரணமாக விருச்சிக லக்னத்தில்
அனுஷம் 1 ம் பாதத்தில் செவ்வாயும்
கேட்டை 3-ம் பாதத்தில் சனியும் இருந்தால்,
செவ்வாய்தான் order wiseல் சனியை தொடுகிறது.
இப்பொழுது சனியுடன் தாக்கம்தான் செவ்வாய்க்கு இருக்கும்
🌹🌹
புதன் அல்லது சந்திரன் order wiseல் சனிக்கு முன் இருந்தால்..
அங்கு சனியின் தாக்கம் இருக்காது.
புதன் சந்திரனுடைய தாக்கம்தான் சனிக்கு இருக்கும்.
🦋🦋🦋
ஒவ்வொரு கிரகமும் சனியுடன் சேர்ந்தால் என்ன ஆகும் என்பதை பார்க்கலாம்.
1.(சனி, செவ்வாய்)
சனி செவ்வாய் சேர்க்கை இருக்கும் ஜாதகர்களின் வாழ்க்கையே போராட்டமாக இருக்கும். அல்லது மாறிவிடும்.
2.(சனி, புதன்)
★சனி புதன் சேர்க்கை இருக்கும் ஜாதகர்கள் கடன் பிரச்சினை ஏற்பட வாய்ப்பிருக்கிறது.
3.(சனி ,சுக்கிரன்)
★சனி சுக்கிரன் சேர்க்கை இருக்கும் ஜாதகர்களின் திருமணத்தை late செய்யும். அல்லது திருமண வாழ்க்கையில் திருப்தி சந்தோஷம்.தார்மீக ரீதியாக இல்லாமல் செய்துவிடும்.
★இதில் ஏதாவது ஒரு பிரச்சினையை சனி பகவான் கொடுத்துவிடுவார்.
4.(சனி ,சந்திரன்)
★சனி சந்திரன் சேர்க்கை இருக்கும் ஜாதகர்கள் வேகமாக இருக்க வேண்டிய இடத்தில் மெதுவாகவும் மெதுவாக இருக்க வேண்டிய இடத்தில் வேகமாகவும் நடந்து கொள்வார்கள் அல்லது இருப்பார்கள்.
★தாயின் மூலம் கிடைக்கக் கூடிய அன்பு, சுகத்துக்கும்,ஏக்கம் தார்மீகம் இவர்களுக்கு குறைவாகவே கிடைக்கும் அல்லது கிடைக்காமல் போகும்.
★சனி சந்திரன் சேர்க்கை இருக்கும் ஜாதகர்கள் உணவு சம்பந்தப்பட்ட விஷயத்திலும் தண்ணீர் சம்பந்தப்பட்ட விஷயத்தில் மிக கவனமாக இருக்க வேண்டும்.
★கையில் எவ்வளவுதான் பணம் இருந்தாலும் தன் ஆசைப்பட்டதை தன் விருப்பப்பட்ட உணவை அதிகமாக சாப்பிட முடியாது.
5.(சனி, குரு)
★சனி குரு சேர்க்கை இருக்கும் ஜாதகங்களில் குழந்தை பிறப்பதை தாமதப்படுத்தும், இல்லை என்றால் பிறந்த குழந்தை மூலம் எந்த பிரயோஜனமும் இவர்களுக்கு இல்லாமல் செய்து விடும்.
★வருமானத்தைப் தடை செய்துவிடும்.அல்லது பிரச்சனையை ஏற்படுத்திவிடும்.
★இல்லையென்றால் பண கஷ்டத்தை கொடுத்துவிடும்.
★இதில் ஏதாவது ஒரு பிரச்சினையை சனி பகவான் கொடுத்திடுவார்.
6.(சனி ,சூரியன்)
★அரசாங்கம் மூலம் கிடைக்கக்கூடிய அனைத்து documentsம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் late செய்வார்.
★அரசாங்கம் சார்ந்த அங்கீகாரங்களை நமக்கு கிடைப்பதற்கு தாமதப்படுத்தும்.
★தந்தையின் மூலம் இவர்களுக்கு கிடைக்கக்கூடிய சுகம் ,துக்கம், ஏக்கம்
தார்மீகம் உதவி,பயன்.
★இவர்களுக்கு குறைவாகவே கிடைக்கும் இல்லையென்றால் கிடைக்காமல் போய்விடும்.
★இதில் ஏதாவது ஒரு பிரச்சினையை சனி பகவான் கொடுத்துவிடுவார்.
திங்கள், 17 ஜனவரி, 2022
நடிப்பு, நடிகர்
பிரபல திரைப்பட நடிகராக திகழ்வதற்கும், திரைப்படகலைகள் சம்பந்தப்பட்ட நடிப்புதுறையில் சிறந்து விளங்க சுக்கிரன், சந்திரன், புதன் ஆகிய கிரகங்களும் லக்னத்திற்கு லக்னம் 2,5,7,9 ஆம் ஸ்தானாதிபதிகளும் மிகவும் முக்கியமாகும்.
ஞாயிறு, 16 ஜனவரி, 2022
Advanced Kp Astrology in Tamil
Kaniprakash M
80562 45107
செவ்வாய் ( லக்ன பாவ ஆரம்ப
முனை) தான் நின்ற நட் சனி
உபநட் சனி மூலம்
பாவத்தொடர்பு 2,6,8,12
எனவே ஜாதகருக்கு சதை
பகுதிகளிலும், தோள்பட்டை
மற்றும் கைகளில் தாங்க
முடியாத வலி வேதனையைக்
கொடுத்தது. காரணம் செவ்வாய்
நின்ற நட்சத்திரம், உப நட்சத்திரம்
வலிக்கு காரணமான சனி ஆகும்.
எந்த எந்த பாவங்கள்தான்
நின்ற நட், உபநட் மூலம் 6ம் பாவ
தொடர்புகொள்கிறதோ,
மேற்கண்ட பாவங்களின்
பாவக்காரக மூலம் நோய் வரும்.
2, 4, 6, 8, 12ம் பாவங்கள் 6ம் பாவ
தொடர்பு பெறும் போது.
மேலும் எந்த எந்த கிரகங்கள்
தான் நின்ற நட்சத்திரம், உப
நட்சத்திரம் மூலம் 6ம் பாவத்
தொடர்பு பெறுகின்றதோ,
மேற்கண்ட கிரகங்களின்
கிரக காரக மூலம் ஜாதகருக்கு
நோய் வரும்.
சனி, 15 ஜனவரி, 2022
அஸ்வினி காரகம்
உதாரணமாக..
அஸ்வினி நட்சத்திரத்தின்
காரக தண்மைகள்
அஸ்வினி
🟡🔵🟢🔵🟢🔵
1. மூன்று குதிரை முகம்
2. அஸ்வினி தேவர்கள்
3. ஆண்
4. தேவகணம்
5. கொக்கு
6. என்னை
7. பெடல்
8. கிரீடம்/ ஹெல்மெட்
9. முடி திருத்தகம்
10. நெத்திச்சுட்டி
11. கூரை ஓடு
12. கொடிமரம்
13. தலைப்பகுதி
14. மூளை
15. மரத்தின் உச்சி
16.தலையின் முடி
17. மொட்டை மாடி
18. கத்தரிக்கோல்
19. ரேஸ் மைதானம்
20. தலைநகரம்
21. சீப்பு
22. தொப்பி
23. ஸ்டார் செய்தல்
24. பிரசவம்
25. ஆரம்ப விழா
26. சரஸ்வதி
27. கொள்ளு
28.எட்டு
29.புஷ்பம்
30.முக்காடு
31. மலைச்சிகரம்
32. விசிறி
33. புகை போக்கி
34. மின் விளக்கு
35. சூரிய ஒளி
36. டாக்டர்கள்
37. கிழக்கு திசை
38. பிரம்மா
39. கோழி முட்டை
40.குழாய்
41. கோபம்
42. மோட்டார் பம்புசெட்
43. வெளியேறுதல்
44.மயக்கம்
45. சபதம்
46. தேன்
47. செயல்
48.சிந்தனை
49.வளர்ச்சி
50.ஆயுள்
வெள்ளி, 14 ஜனவரி, 2022
Kp Astrology
✍✍✍✍
தகவல் தொடர்பு துறையில் பணி:-
முதலில் உத்யோகம் செய்ய கொடுப்பினை உள்ளதா என்பதற்கு 6 ம் பாவத்தை ஆய்வு செய்ய வேண்டும்.
6 ம் பாவ உ.ந ராகு
ராகு 6 ம் பாவத்துக்கு உப உப நட்சத்திரமாகவும் உள்ளார். எனவே 6 ம் பாவத்தின் வலிமை 85%
கிரகம் ந.அ உ.ந உ.உ.ந
ராகு சந் சந் புதன்
2,6,10 1 1 4,5,12
ராகு நின்ற நட்சத்திரம், உப நட்சத்திரம் இரண்டும் ஒரே கிரகமாக இருந்தால்..
நட்சத்திர சம்பவம் தொடர்வதை உப உப நட்சத்திரமே முடிவு செய்யும் என்பது விதி.
எனவே
ராகு 2,4,6,10,12 தொடர்பு பெற்று சிறப்பாக உள்ளார்.
தகவல் தொடர்பு துறைக்கு
3 ம் பாவத்தை பார்க்க வேண்டும்.
3 ம் பாவ உ.ந சுக்கிரன்
3 ம் பாவத்துக்கு உப நட்சத்திரமாக வந்த சுக்கிரன்,
லக்ன பாவத்துக்கும்,
இறை கொடுப்பினையை குறிக்கும்..
9 ம் பாவத்துக்கும்
உப நட்சத்திரமாக உள்ளார்.
கிரகம் ந.அ உந உஉந
சுக் சனி சனி சனி
1,3,7,9 3,7,11 3,7,11 3,7,11
= 1,3,7,9,11 தொடர்பு பெற்று
3 ம் பாவத்துக்கு சாதகமாக உள்ளது.
9 ம் பாவத்தை கட்டுப்படுத்தும் 3 ம் பாவமும் உடன் இருப்பதால் 10 ம் பாவத்துக்கு 45% சாதகமாக இருப்பதாக எடுத்துக் கொள்ளலாம்.
லக்ன பாவத்துக்கும்,
9 ம் பாவத்துக்கும்
1,3,7,9,11 தொடர்பு சாதகமே.
அடுத்து
கிரக காரகன் புதனை ஆய்வு செய்ய வேண்டும்
கிரகம் ந.அ உ.ந
புதன் சனி குரு
4,5,12 3,7,11 4,8,12
= 3,5,7,11 தொடர்பு மத்திம நிலையில் சாதகமாக உள்ளது.
( 5 ம் பாவத்தை உடனிருக்கும் 11 ம் பாவம் Control செய்யும்)
( சந்திரன் தசாநாதனாக இருப்பதால் தன் சொந்த நட்சத்திரத்திலும், புத்திநாதன் ராகுவின் உப நட்சத்திரலும் இருப்பார் என்ற விதிப்படி)
கிரகம் ந.அ உ.ந
சந் = சந் ராகு
1 1 2,6,10
= 1,2,6,10
புத்தி நாதன் ராகுவின் தொடர்பு~
கிரகம் ந.அ உ.ந உஉந
ராகு சந் சந் புதன்
2,6,10 1 1 4,5,12
ராகு நின்ற நட்சத்திரம், உப நட்சத்திரம் இரண்டும் சந்திரனாக இருப்பதால் நட்சத்திர சம்பவம் தொடர்வதை உப உப நட்சத்திரம் புதனே தீர்மானிக்கும்.
அதன்படி ராகுவின் தொடர்பு 2,4,6,10,12.
வேலையில் சேர்வதற்கு தசா புக்தி சாதகமாக இருந்தது.
தசா புத்தி சாதகமாக இருந்தது.
ஞாயிறு, 1 ஆகஸ்ட், 2021
தற்கொலையும் ஜோதிடமும்
KaniPrakash M ( JKPATC ):
தங்களுக்கு ஏற்பட்ட நெருக்கடியான பாதிப்பை எதிர் கொள்ள முடியாமல்.. தங்களுடைய பாதிப்பை பெரியதாக கருதி தற்கொலை செய்து கொள்கிறார்கள் .
நாம்..
ஜோதிட ரீதியான காரணங்கள் கிரக நிலைகளை ஆராய்வோம் . ஜாதகத்தில்
மூன்றாம் பாவமும் முக்கிய பங்கு வகிக்கிறது . மூன்றாம் பாவத்தின் மூலம் மனநிலையை அறியலாம் .
மனம் செயல்படும் விதம், மனதைரியம் , மன அலைகள் , மனம் எடுக்கும் முடிவுகள் பற்றி மூன்றாம் பாவமும் ,
அதன் அதிபதியின் நிலையைத் தெரிந்து கொள்ள முடியும் .
3 ஆம் அதிபதி பகை நீச்சம் பெற்றிருந்தாலும் ,
3 ல் ராகு , கேது , சனி , மாந்தி , பகை கிரகம் , நீச்சகிரகம் இருந்தாலும்
ஜாதகர்க்கு மனோ தைரியம் குறையும் ,
நல்ல எண்ணங்கள் இருக்காது . சிந்தனைகளின் முடிவுகள் அடிக்கடி மாறிக்கொண்டே இருக்கும் .
இவர்களுடைய திசாபுக்திகள் நடைமுறைக்கு வந்தால் தவறான முடிவுக்கு சொல்வார்கள் .
தற்கொலைக்கு முடிவு எடுக்கும் சூழ்நிலையும் , அற்பமாய் ஆயுளை முடித்துக்கொண்டு உலக வாழ்க்கையிலிருந்து விடுவித்துக் கொள்ள மனம் துடிக்கும் .
ஜாதகத்தில் கெட்ட கிரக திசாபுத்திகள் நடப்பில் இருக்க வேண்டும்
அவ்வாறு கெட்ட திசாபுக்திகளை அறிந்து கொண்டால் அதிலிருந்து விடுபட முயற்சிக்கலாம்
1.8 ஆம் வீடுகள் மூலம் ஆயுளின் காலத்தை அறியலாம் .
ஜாதகத்தில் 1,7 ம் வீடுகளின் ஆய்விலிருந்து தற்கொலை நிலைகளை அளவிட முடியும் .
லக்கினத்திற்குத் முக்கிய பங்கு உள்ளது .
கிரக நிலைகள்
✍ லக்கினம்..
செவ்வாய் , சனி , ராகு , கேது ஆகிய கிரக நட்சத்திர சாரம் பெற்று இருப்பதும் .
✍) லக்கினத்தில் செவ்வாய் , சனி , ராகு , கேது மாந்தியிருந்தாலும் அல்லது இணைந்திருந்தாலும் ,
✍ ) லக்னத்திற்கு பாதகாதிபதியின் கிரகநட்சத்திர சாரத்தில் லக்னம் நின்று இருப்பதும் ,
✍ ) லக்கினம் ராசி தொடக்கத்தில் அல்லது முடியும் தருவாயில் அதாவது ராசி சந்திப்பில் லக்கினம் ராசி அமைந்திருந்தால் பலம் குறைந்து காணப்படும் .
✍ ) லக்கினம் நின்ற ராசிகளில் கிரகயுத்தம் இருப்பினும் லக்னப்பாதிப்பு அடையக்கூடும் .
✍ ) லக்கினாதிபதி பகை நீசம் பெறுவதும் , லக்கினாதிபதி பகை கிரகங்களுடன் இருப்பதும் லக்கினாதிபதி வலு குறைந்திருப்பது மற்றும் லக்னாதிபதி 6 , 8 , 12 ல் மறைந்து இருப்பதும் .
✍)
லக்னம் பலம் குறைந்து 6 - 8 - 12-ஆம் வீடுகளில் ஒன்றில் இருந்தாலும்,
லக்கினத்தில் 6 - 8 - 12-ஆம் அதிபதிகள் தனித்தனியே அல்லது சேர்ந்திருந்தாலும், ஜாதகருக்கு உடல் நிலையில் பாதிப்பை தரும்.
பல துன்பங்கள் நோய் பாதிப்பும் ஏற்படுத்தும்.
✍ ) சனி , செவ்வாய் குருவை சூரியனை , சந்திரனை பார்க்கப் பெறுதல் ,
✍ ) சூரியனும் , சந்திரனும் சனியால் பாதிப்படைய லக்கினாதிபதியான இயற்கை சுபக்கிரகம் 11 ல் ராகு ( அ ) கேதுவுடன் அமைந்திருத்தல்
✍ ) சுக்கிரன் , குரு புதன் 6 , 8 , 12 ஆம் வீடுகளில் ஒன்றில் இருந்தால் அற்பாயுள்.
✍ ) சனி சந்திரனுக்கு 8 ல் நின்றால் அந்த ஜாதகனுக்கு அதிக துன்பம் ஏற்படும்.
தற்கொலை செய்து கொள்வதற்கு எண்ணம் ஏற்படும் .
பொருள் நிலமும் நஷ்டமாகும் . அரச தண்டளை கிடைக்கும் .
லக்னாதிபதி கேந்திரத்தில் இருந்தால் மேல் கூறிய துன்பங்கள் விலகி சுப பலன்கள் ஏற்படும் .
✍) மேஷம் அல்லது விருச்சிகமாகிய ராசிகளிலொன்று லக்கினமாக இருக்க,
இந்த லக்கினத்திற்கு 6-ல் அல்லது 8-ல் பாவிகள் இருந்தால் விஷத்தால் மரணம் ஏற்படும் .
✍ ) லக்னத்தில் செய்வால் , சனி , ராகு , கேது நின்று இவர்களுடன் மாந்தி இணைந்து..
தசாபுத்தி நடத்தினால் பல்வேறு பிரச்சினைகளால் மனம் பலவீனம் பெற்று பாதிப்பிற்கு உள்ளாவார்கள்.
✍) மாந்தியோடு இணைந்த எந்த கிரக திசாபுத்தி நடப்பில் இருந்தாலும் தற்கொலை செய்யத் தோன்றும்.
✍ ) லக்கினத்திற்கு பாதகமானவர்களின் பாவாதிபதி திசாபுத்தி காலத்திலும் ஏற்படும் வாய்ப்புள்ளது .
✍ ) தசாநாதன் , பகை , நீசம் பெற்றும் கிரகயுத்தம் பெற்றும் திசாபுத்தி நடத்தினாலும் வாய்ப்புள்ளது .
✍ ) தசாநாதன் 6,12 ல் நின்று தசாபுத்தி நடத்தக்கூடாது .
✍ ) தசாநாதன் பகை கிரகங்களுடன் அல்லது 6,8,12 ம் பாவாதிபதிகளுடன் இணைவு பெற்றிருக்கக்கூடாது .
மேல்கண்ட அமைப்புகள் உடைய ஜாதகரை,
எப்போதும் கவனித்துக் கொண்டேயிருக்க வேண்டும் . இவர்களுக்கு தாழ்வு மனப்பான்மை வரக்கூடாது .
நல்ல எண்ணங்களையும் , சிந்தனைகளையும் இவர்களுக்கு உருவாக்க வேண்டும்.
✍ )
உடல் காரகனாகிய சந்திரனுக்கும் ,
உயிர் ஸ்தானமாகிய லக்கினத்துக்கும்..
3 ம் அதிபதியுடன் சனி இணைந்து ஏதாவது ஓர் ராசியில் இருந்தால் ,
இவர்களது தசாபுத்திக் காலங்களில் ஜாதகர் விஷம் சாப்பிட்டு தனது உயிரைமாய்த்துக் கொள்வார் .
இவர்களுடன் ராகு இணைந்தாலும் , சுருக்குமாட்டித் தற்கொலை செய்து கொள்வார்கள்.
✍ ) லக்கினத்திற்கு அல்லது ராசிக்கு மூன்றாம் அதிபதியும் சனியும் சேர்ந்து ஏதாவது ஒரு ராசியில் இருந்து இவர்களின் தசா புத்தியில் விஷம் சாப்பிட்டு தன்னுயிரை தான மாய்த்துக் கொள்வார்கள் .
✍) ராகு இவர்களுடன் சேர்ந்திருந்தால் கயிற்றில் தன்னுயிரை மாய்த்துக் கொள்வார்கள் .
✍✍✍✍
மேஷம் லக்கினம் புதன் சனி
✍
ரிஷபம் லக்கினம் சந்திரன் சனி
✍
மிதுனம் லக்கினம் சூரியன் சனி
✍
கடகம் லக்கினம் புதன் சனி
✍
சிம்மம் லக்கினம் சுக்கிரன் சனி
✍
கன்னி லக்கினம் செவ்வாய் சனி
✍
துலாம் லக்கினம் குரு சனி
✍
விருச்சிகம் லக்கினம் ராகு சனி
✍
தனுசு லக்கினம் ராகு சனி
✍
மகரம் லக்கினம் குரு சனி
✍
கும்பம் லக்கினம் செவ்வாய் சனி
✍
மீனம் லக்கினம் சுக்கிரன் சனி
லக்கினத்திற்கு மூன்றாம் அதிபதியும் சனியும் சேர்க்கை பெற்றிருந்து இவர்களின் திசாபுத்தி நடந்தால் உடல் & உயிருக்கும் பாதிப்பை தரும்.
கோச்சார நிலைகளையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும் .
✍ )
லக்கினாதிபதியும்
ஆறாம் அதிபதியும் சேர்ந்திருக்க
இவர்களுடன் ராகு சேர்க்கை பெற்றிருந்தால் அதிகமான மருந்தை சாப்பிட்டு மரணத்தை அடைவர்கள்.
✍) லக்கினாதிபதியும் ஆறாம் அதிபதியும் சேர்ந்திருக்க இவர்களுடன் சனி சேர்ந்தால்.
தண்ணீரால் மரணத்தை அடைவர்கள்.
✍ )
ஐந்தாம் அதிபதி,
மூன்றாம் அதிபதி, லக்கினாதிபதி
மூவரும் சேர்ந்து இவர்களுடன் ராகு அல்லது கேது சேர்ந்திருந்தால் கயிற்றில் தூக்குப் போட்டுக் கொண்டு மரணத்தை அடைவார்கள்.
✍ )
மகரம் மற்றும் கும்பம் நான்காம் வீடாக அமைந்து அதில் சந்திரன் இரண்டு பாவிகளுடன் இருந்தால்..
கயிற்றில் தூக்குப் போட்டடு இறந்து விடுவான்.
வியாழன், 29 ஜூலை, 2021
சொர்க்கமும் நரகமும் எங்குள்ளது?
சொர்க்கமும் நரகமும் எங்குள்ளது?
குரு ஒருவருக்கு பேரழகியான ஒரு மகள் இருந்தாள். அதனால் அவளை திருமணம் முடிக்க பலர் போட்டி போட்டனர்.
அவர் தன் மகளை மணம் முடிக்க போட்டி போட்டவர்களிடம் " நான் இரண்டு கேள்விகள் கேட்பேன். அதற்கு சரியான பதில் சொல்பவருக்கே எனது மகள்" என்று சொன்னார்.
மறுநாள் போட்டியாளர்கள் அனைவரும் குரு வீட்டில் கூடி இருந்தனர்.
குரு அவர்களைப் பார்த்து " உலகிலே இனிமையான ஒரு பொருளை கொண்டு வாருங்கள்" என்று சொன்னார்.
மறுநாள் எல்லோரும் ஆளுக்கொரு பொருளை கொண்டு வந்தனர்.
ஒருவன் தேனைக் கொண்டுவந்தான்.
இன்னொருவன் கரும்பைக் கொண்டு வந்தான். இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொரு இனிமையான பொருளைக் கொண்டு வந்திருந்தனர்.
வரிசையில் கடைசியாக குருவின் ஒரு ஏழை சிஷ்யனும் நின்டிருந்தான்.
குரு அவனைப் பார்த்து "நீயுமா" என்று ஆச்சரியமாக கேட்டார்.சீடன் "நான் உங்கள் மகளைக் காதலிக்கிறேன்" என்று சொன்னான்.
குரு "நீ என்ன கொண்டு வந்திருக்கிறாய்" என்று கேட்டார்.
சீடன் தான் கொண்டு வந்திருந்த சிறிய பெட்டியை திறந்து காட்டினான்.
அதனுள் ஒரு ஆட்டின் நாக்கு இருந்தது.
குரு அதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
குரு "என்ன இது எதற்காக இதை கொண்டு வந்தாய்" என்று கேட்டார்,
சீடன் " குருவே நீங்கள் உலகிலேயே இனிமையான பொருளை கொண்டுவர சொன்னீர்கள். நாவை விட உலகில் சிறந்த பொருள் வேறு ஏது?
மனிதனுடைய நாவை கொண்டு வர முடியவில்லை. அதனால் தான் குறியீடாக ஆட்டின் நாவை கொண்டுவந்தேன். நாவில் இருந்து தான் இனிமையான சொற்கள் வருகின்றன. அதை சோகத்தில் இருப்பவன் கேட்டால் சந்தோசம் அடைகிறான். நோயாளி கேட்டால் குணம் அடைகிறான்." என்றான்.
குரு " இதில் நீ வெற்றி அடைந்தாய். வாழ்த்துகள் " என்று சொன்னார்
சீடன் "அடுத்த கேள்வி என்ன" என்று கேட்டான்.
குரு " உலகிலேயே கசப்பான ஒரு பொருளை கொண்டு வரவேண்டும் " என்று சொன்னார்.மறுநாள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கசப்பான பொருளை கொண்டு வந்தனர்.
ஒருத்தன் வேப்பங்காயை கொண்டு வந்தான், இன்னொருவன் எட்டிக்காயை கொண்டு வந்தான்.
கடைசியாக சீடன் வந்தான். அவன் கையில் அதே பெட்டி. அவன் அதை திறந்து காட்டினான். அதே போல ஆட்டின் நாக்கு.
குரு " என்ன விளையாடுகிறாயா? இனிமையான பொருளை கேட்டேன் நாவை கொண்டு வந்தாய்.
கசப்பான பொருளை கேட்டதற்கும் நாவை கொண்டு வந்து இருக்கிறாயே? என்ன அர்த்தம்?" என்று கேட்டார்.
சீடன் " தீய சொற்களை பேசும் நாவை போல கசப்பான பொருள் உலகில் உண்டா? அதில் இருந்து வரும் சொற்களைக் கேட்டால் மகிழ்ச்சியாய் இருப்பவனும் துயரம் கொள்கிறான்.
நட்பாக இருப்பவனும் பகையாக மாறுகிறான். எனவே நாவு தான் உலகிலேயே கசப்பான பொருள்" என்று சொன்னான்.
சீடனின் அறிவைக் கண்டு வியந்த குரு தான் மகளை அவனுக்கே மணம் முடித்துக் கொடுத்தார்.
நாவு ஒரு அற்புத சாவி.
சொர்கத்தின் திறவுகோலும் அது தான்.
நரகத்தின் வாசல் சாவியும் அது தான்.
திங்கள், 1 மார்ச், 2021
யாருக்கு கொழுப்பு சத்து குறைவாக இருக்கும்
குறைந்த அளவு கலோரியும், பாவத் தொடர்பும்
2 ஆம் பாவ உப நட்சத்திரம், 1,59 ஆம் பாவ முனைகளுக்கும் உப நட்சத்திரமாக அல்லது நட்சத்திரமாக வருவது சிறப்பு.
2 ஆம் பாவ உப நட்சத்திரம் தான் நின்ற நட்சத்திரம் மற்றும் உப நட்சத்திரம் மூலம், 1,5,9 ஆம் பாவமுனைகள் தொடர்பு கொள்வதும் சிறப்பு.
மேற்கண்ட அமைப்பில் உள்ளவர்களுக்கு, வாயில் அதிகம் உமிழ் நீர் சுரக்கும்,
உணவு உட்கொள்ளும் போது வாயிலேயே உணவு பொருட்களை குறைந்த கலோரியாக மாற்றி விடும்.
குறிப்பாக உமிழ் நீர் அதிகம் சுரந்து அந்த நீருடன் உணவு இரப்பைக்கு சேர்ந்தால்..
அந்த உணவு மூலம் உருவாகும் சக்தி குறைந்த
அளவிலான கலோரி கொண்டதாக இருக்கும்.
![]() |
| Kp Astrology, Kaniprakash M 8056245107 |
Jothisha Acharya
Kaniprakash M
8056245107
8056245187
உடலின் தாங்கும் சக்தி
ஒருவர் சீரான மெல்லிய உடல்வாகினை பெற்றிருப்பவர்களின் ஜாதக அமைப்பு
🌼 லக்ன பாவ உப நட்சத்திரம் 3,7,11 ஆம் பாவங்களுக்கு உப நட்சத்திரமாகவோ, நட்சத்திரமாகவோ, உப உப நட்சத்திரமாகவோ அமைவது.
🌼 லக்ன பாவ உப நட்சத்திரம் தான் நின்ற நட்சத்திரம், உப நட்சத்திரம் மூல 3,7,11 ஆம் பாவங்களை தொடர்பு கொள்வது.
🌼 லக்ன பாவ உப நட்சத்திரத்தில் சாரத்தில் நிறைய கிரகங்கள் இருப்பது
போன்ற அமைப்புகள் உள்ள ஜாதகர் உடல்வாகு மெல்லியதாக ஒரே சீராக இருக்கும்.
2 ஆம் பாவமும் அதன் பரிணாம பாவமான 4 ஆம் பாவமும்.
2 ஆம் பாவம் என்பது ஒருவரின் உடலுக்கு தீமையை தராத,
சராசரி அளவுள்ள உடலின் தேவைக்கான....
உடலுக்கு தேவையான சக்தி அல்லது கலோரி அல்லது கொழுப்பு ஆகும். மேற்கண்ட சதியினை அல்லது கொழுபிணை நாம் எளிதாக எரிக்க முடியும்.
ஆனால் 4 ஆம் பாவம் என்பது உடலின் தேவைக்கு அதிகமான சக்தியை குறிக்கும்.
இந்த சக்தியை எரிக்க முடியாது. இந்த சக்தி (கலோரி) உடம்பில் ஓரிடத்தில் (வயிற்று பகுதியில்) தேங்கி நிற்கும்.
4 ஆம் பாவம் குறிப்பிடும் சொத்து புறச்சார்புடையது (வெளிஉலகில் உள்ளது).
அதே 4 ஆம் பாவம் குறிப்பிடும் சக்தி அகம் சார்ந்தது. (உடலுக்கு உள்ளே உள்ளது)
உடலுக்கு வெளியே எவ்வளவு சேர்த்தாலும் பிரச்சனை இல்லை, ஆனால் உடலுக்கு உள்ளே சேர்ந்தால் பிரச்சனை அதிகம்.
Jothisha Acharya
Kaniprakash M
80562 45107
80562 45187
வெள்ளி, 26 பிப்ரவரி, 2021
திருமண பொருத்தம் Kp Astrology
Advanced Kp Astrology முறையில் காலதாமான திருமணம் யாருக்கு?அதற்கான பாவங்கள் யாவை?
அதற்கான கிரக்காரகம் யாது?
காலதாமான திருமணத்திற்கான விதிகள் யாவை?
விதி 1
லக்னம் கொடுப்பினை 7ஆம் பாவத்திற்க்கு சாதகமா அல்லது பாதகமா என்று பார்பது
விதி 2
7ஆம் பாவம் தன்னுடைய பாவத்திற்க்கும் சாதகமான அல்லது பாதகமான பாவங்களை தொடர்புகொண்டுள்ளதா?
விதி 3
7ஆம் பாவம் லக்ன பாவத்திற்க்கு சாதகமான அல்லது பாதகமான பாவங்களை தொடர்புகொண்டுள்ளதா?
விதி 4
களத்திர காரகன் சுக்கிரன் 7ஆம் பாவத்திற்க்கு சாதகமான அல்லது பாதகமான பாவங்களை தொடர்புகொண்டுள்ளதா?
விதி 5
நடப்பு தசை மற்றும் புத்திகள் லக்னம் மற்றும் 7ஆம் பாவத்திற்கு சாதகமான அல்லது பாதகமான பாவங்களை தொடர்புகொண்டுள்ளதா?
விதி 6
7ஆம் பாவ உபநட்சத்திர அதிபதி தான் நின்ற நட்சத்திரம் உபநட்சத்திரம் மூலமாக 6,8,12ம் பாவங்களை தொடர்பு கொண்டால் 7ம் பாவம் 60 சதவீதம் பாதிப்பு அடைந்துள்ளது?
விதி 7
7ஆம் பாவ உபஉபநட்சத்திர அதிபதி தான் நின்ற நட்சத்திரம் உபநட்சத்திரம் மூலமாக 6,8,12ம் பாவங்களை தொடர்பு கொண்டால் 7ம் பாவம் 25 சதவீதம் பாதிப்பு அடைந்துள்ளது?
விதி 8
7ஆம் பாவ ஆரம்பமுனை நட்சத்திர அதிபதி தான் நின்ற நட்சத்திரம் உபநட்சத்திரம் மூலமாக 6,8,12ம் பாவங்களை தொடர்பு கொண்டால் 7ம் பாவம் 15 சதவீதம் பாதிப்பு அடைந்துள்ளது?
விதி 9
7ம் பாவம் பாதிக்கபட்டுருக்கும் பொழுது 5ம் பாவம் தன்னுடைய பாவத்திற்கும், லக்னத்திற்கும் சாதகமான பாவங்களை கண்டிப்பாக தொடர்புக்கொண்டுடிருக்க வேண்டும் என்ற கட்டாயத்திற்கு தள்ளபடுகிறது.
![]() |
| Kp Astrology |
ஏனெனில் 5ம் பாவத்தில் காதல் வயப்படுதல்,
இன்ப உணர்வுகளை அதிகமாக நுகருதல்,
எதையும் உணர்வு பூர்வமாக சிந்தித்தல்,
,சிற்றின்ம்பம் மீது அதிகமான நாட்டம்
,கவர்ச்சிகளுக்கு எளிதில் மயங்குதல்,
கற்பனை கலந்த உணர்வுகள், உல்லாசம்,சல்லாபம், காமம்,தாம்பத்தியம்,
கலை,தன்னை அழகுபடுத்திக்கொள்ளுதல்,
ஹார்மோன், மற்றவர்களிடம் மயங்குதல், ஈர்ப்பு, விட்டுக்கொடுக்கும் குணம், அரவணைக்கும் வாழ்க்கை, பாசம், பாசம்,உணர்ச்சிவாய்படுதல் தமது செயல்களால் மற்றவர்களை மகிழ்ச்சிப்படுத்துதல்,
கேளிக்கைகள், சூதாட்டம், சினிமா,நாடகம்,இசை,எதையும் அளவிற்கு அதிகமாக வர்ணணை செய்தல்,மென்மையான உணர்வுகள் போன்ற பல காரகங்களை தன்னிடத்தே கொண்டுள்ளது 5ம் பாவம் ஆகும்.
7ம் பாவம் பாவம் என்பது ஒருவருடன் இணைந்து செயல்படுவதை குறிக்கும், ஜாதகர் ஸ்பரிச சுகத்தை மற்றொருவருக்கு கொடுத்து அவரிடம் இருந்து பெறுவதை குறிக்கும்.
உள்ளதை மற்றவர்களிடம் பகிர்ந்துக்கொள்வதை குறிக்கும்.தனக்கு சம்மானவர் களுடன் பழவதைகுறிக்கும்.
ஏனெனில் 7ம் பாவம் பாதிக்கபட்டுருக்கும் பொழது மேலே குறிப்பிட்டுள்ள 7ம் பாவ காரகத்தை ஒருவரல் அனுபவிப்பதில் பிரச்சனைகள் ஏற்படும்
அதை ஈடுகட்டவே 5ம் பாவம் தன்னுடைய பாவத்திற்கும லக்னத்திற்கும சாதகமான பாவங்களை தொடர்பு கொண்டுயிருந்தால் ஜாதகருக்கு 7ம் பாவத்தால் ஏற்பட்ட பாதிப்பில் இருந்து மீளமுடியும்.
விதி 10
7ஆம் பாவ உபநட்சத்திர அதிபதி தான் நின்ற நட்சத்திரம் உபநட்சத்திரம் மூலமாக 6,8,12ம் பாவங்களை தொடர்பு கொண்டால்...
7ம் பாவம் 60 சதவீதம் பாதிப்பு அடையும்,
எனவே, கண்டிப்பாக சுக்கிரன் ஒற்றைப்படை பாவங்களை தொடர்பு கொண்டுயிருக்கவேண்டும்.
விதி 11
மதி என்ற தசை புத்தி விபரம்
7ம் பாவம் பாதிக்கபட்டுயிருந்தாலும் ஜாதகருக்கு பிறந்த முதலே நடக்கும் தசை புத்திகள் ஒற்றைப்படை பாவங்களை கொண்டு நடக்கும் பொழுது இளமையிலே ஜாதகருக்கு திருமணம் நடக்கும்.
ஒற்றைப்படை பாவங்கள் தன்னுடைய அணியின் தசையில் தன்னுடைய பாவ பலன்களை வலிமையாகவும்,இரட்டைப்படை பாவங்கள் தன்னுடைய அணியின் தசையில் தன்னுடைய பாவ பலன்களை வலிமையாகவும் செய்யும்.
7ம் பாவம் பாதிக்கபட்டுயிருந்தாலும் நடப்பது ஒற்றைப்படை பாவ தசைகள் என்பதால் 7ம் பாவ உப நட்சத்திரத்தால் வலிமையாக தன்னுடைய பாவத்தை கெடுக்க முடியாது?என்பதால் இளமையிலே ஜாதகருக்கு திருமணம் நடக்கும்.
Jothisha Acharya Kaniprakash M
8056245107, 8056245187
2ம் பாவம்
2ம் பாவம் :
முகத்தில் உள்ள கண், மூக்கு, வாய், நாக்கு, பற்கள், தாடை, கன்னம், தொண்டை போன்றவற்றை 2ம் பாவம் குறிக்கும்.
ஒருவரது சொந்த கருத்தினை விளக்குவது அவரது பேச்சுத்திறன் ஆகும்,
பார்வை,
சுவையான உணவினை உட்கொள்ளும் அமைப்பு, ஒருவரது முக லட்சணம் போன்றவைகள் 2ம் பாவத்தின் காரகங்களாகும்.
ஒருவருக்கு கிடைக்கக்கூடிய பணவரவு
அவரது சொந்தபணம், கையிருப்பு பணம்,
செல்வம்,
சொந்த பணத்தை பாதுகாக்கும் திறன்,
எளிதில் பணமாக மாற்றத்தக்க பொருட்கள்,
ஒருவர் தனது சொத்தை அனுபவிக்கும் யோகம்,
வாழ்க்கைக்கு தேவையான பணம் போன்றவைகள் 2ம் பாவத்தின் காரகங்களாகும்.
3ம் பாவம் என்பது பத்திரங்களை குறிக்கும்.
வீடு, நிலம், வாகனம் போன்றவற்றுக்கு பத்திரங்கள் அவசியமாகும்.
2ம் பாவம் 3ம் பாவத்திற்கு 12ம் பாவம் என்பதால் 2ம் பாவ காரகங்களுக்கு பத்திரங்கள் தேவையில்லை.
எனவே இதனை எப்போது நாம் நினைக்கிறோமோ அப்போதே எளிதில் பணமாக மாற்றிக் கொள்ளலாம்.
2ம் பாவம் என்பது ஜாதகரையும், அவரோடு சேர்ந்த அவரது குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களையும் குறிக்கும்.
ஜாதகரின் செல்வம் வரும் வழிகள் மற்றும் தனம் செல்லும் வழிகள்,
பாலகல்வி,
தாயின் மூத்த சகோதரம், உடல் உணவை ஏற்றுக்கொள்ளும் திறன், போன்றவைகள் 2ம் பாவத்தின் காரகங்களாகும்.
Jothisha Acharya
Kaniprakash M
80562 45107
80562 45187
Chennai Tamilnadu
-
Advanced Kp Astrology முறையில் காலதாமான திருமணம் யாருக்கு?அதற்கான பாவங்கள் யாவை? அதற்கான கிரக்காரகம் யாது? காலதாமான திருமணத்திற்கான விதிகள...






